Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் மீட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர்

பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் மீட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர்

By: Nagaraj Sun, 24 May 2020 6:59:08 PM

பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் மீட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர்

பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று அதிகாலை அவர்கள் சிறப்பு விமானத்தில் வந்து சேர்ந்தனர்.

இலங்கையை சேர்ந்தவர்கள் பல்வேறு வெளிநாடுகளில் படிப்பு, வேலை உட்பட பல்வேறு நிமித்தங்களுக்காக தங்கி உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விமானம் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

bangladeshis,sri lankans,repatriated and rescued ,
பங்களாதேஷ், இலங்கையர்கள், நாடு திரும்பினர், மீட்கப்பட்டனர்

அந்த வகையில் பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர். டாக்கா விமான நிலையத்திலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.50 அளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் யூ.எல் – 1423 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதன் பின்னர் குறித்த அனைவரும் இராணுவத்தின் உதவியுடன் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Tags :