Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் வரும் நவ.27 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தெலுங்கானாவில் வரும் நவ.27 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Sun, 26 Nov 2023 12:34:16 PM

தெலுங்கானாவில் வரும் நவ.27 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தெலுங்கானா : குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற நவ.27 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ..... சீக்கியர்களின் புனித பண்டிகையான குருநானக் ஜெயந்தி தெலுங்கானா மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டு குருநானக் ஜெயந்தி தெலுங்கு நாள்காட்டியின்படி நவம்பர் 27 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனால், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

school,college,telangana ,பள்ளி, கல்லூரி,தெலுங்கானா

மேலும், அரசு விடுமுறை என்பதால் வருகிற நவ.27 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வங்கிகளும் இயங்காது

தெலுங்கானா மட்டுமல்லாமல் போபால், சண்டிகர், டேராடூன், கொல்கத்தா, லக்னோ, மும்பை, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் இயங்கும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|