Advertisement

பாகிஸ்தானில் கொரோனாவால் 2,80,029 பேர் பாதிப்பு

By: Monisha Tue, 04 Aug 2020 10:12:36 AM

பாகிஸ்தானில் கொரோனாவால் 2,80,029 பேர் பாதிப்பு

பாகிஸ்தானில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,000-ஐ நெருங்க உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 82 லட்சத்து 37 ஆயிரத்து 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரம்படி 331 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் பலியாகினர். பாகிஸ்தானில் கொரோனாவால் இதுவரை 2,80,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் தற்போது கொரோனா பலி 6,000 -ஐ நெருங்கி உள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

pakistan,corona virus,infection,kills,pm imran khan ,பாகிஸ்தான்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார். கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியது.

அதன்படி, வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் ஆகியவற்றைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மதக் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை.

Tags :
|