Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக தற்காலிக ஆசிரியர் பணி...விண்ணப்பதாரர்களில் 28,984 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி

தமிழக தற்காலிக ஆசிரியர் பணி...விண்ணப்பதாரர்களில் 28,984 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி

By: vaithegi Sat, 09 July 2022 7:04:21 PM

தமிழக தற்காலிக ஆசிரியர் பணி...விண்ணப்பதாரர்களில் 28,984 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி

தமிழகம் : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மட்டுமே 10,331 காலிப்பணியிடங்கள் உள்ளன. சாதரணமாக ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றன.

ஆனால் ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வானவர்களுக்கே இன்னும் பணியிடம் வழங்கப்படவில்லை மற்றும் இந்தாண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதாவது, ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு முறையாக பாடங்கள் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், உடனடியாக போதுமான ஆசிரியர்களை நியமிக்கும்படி பெற்றோர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டன.

temporary teacher,exam ,தற்காலிக ஆசிரியர்,தேர்ச்சி

இதனால், தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படலாம் என அறிவிக்கப்பட்டது. தற்காலிக ஆசிரியராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,50,648 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களில் 28,984 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

Tags :