Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வந்தே பாரத் திட்டத்தின்கீழ் தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்

By: Monisha Wed, 24 June 2020 1:28:37 PM

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்

உலகம் முழுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து சர்வதேச போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருவோர் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

எனவே, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை அறிவித்தது. அதன்படி இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

vande bharat,special flights,tamil nadu,central government,inquiry ,வந்தே பாரத் திட்டம்,சிறப்பு விமானங்கள்,தமிழ்நாடு,மத்திய அரசு,விசாரணை

இந்த திட்டத்தின்கீழ் செயல்படும் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை 26 ஆயிரம் தமிழர்கள் 50 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

Tags :