Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐதராபாத் சட்டப்பேரவையில் ரு.2.90 லட்சம் கோடி பட்ஜெட் தாக்கல்

ஐதராபாத் சட்டப்பேரவையில் ரு.2.90 லட்சம் கோடி பட்ஜெட் தாக்கல்

By: Nagaraj Tue, 07 Feb 2023 9:21:39 PM

ஐதராபாத் சட்டப்பேரவையில் ரு.2.90 லட்சம் கோடி பட்ஜெட் தாக்கல்

ஹைதராபாத்: நிதியமைச்சரின் பட்ஜெட் தாக்கல்... தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஐதராபாத் சட்டப்பேரவையில் ரூ.2,90,396 கோடி பட்ஜெட்டை அம்மாநில நிதி அமைச்சர் ஹரிஷ்ராவ் தாக்கல் செய்தார்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், இந்த ஆண்டு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 80 ஆயிரம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 95 சதவீத முன்னுரிமை, கடைத் தள ஊழியர்கள் முதல் கோட்டாக்சி வேலைகள் போன்ற அறிவிப்புகள் இதில் அடங்கும்.

budget,minister,telangana, ,தெலுங்கானா, நிதியமைச்சர், பட்ஜெட்

மேலும், மார்ச் மாத இறுதிக்குள் 125 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கும் பணி நிறைவடையும். இதற்காக தெலங்கானா அரசு ரூ. 147 கோடி செலவிடப்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்தின் புதிய தலைமைச் செயலகம் ஹைதராபாத்தில் 7 லட்சம் சதுர அடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ரூ.650 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை வரும் 17ம் தேதி முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைக்கிறார். ஏழைகளுக்கு 2 படுக்கையறை வீடுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

Tags :
|