Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்திராயன்-3 விண்கலத்தின் 2வது உயரம் உயர்த்தும் நடவடிக்கை

சந்திராயன்-3 விண்கலத்தின் 2வது உயரம் உயர்த்தும் நடவடிக்கை

By: Nagaraj Mon, 17 July 2023 11:51:52 PM

சந்திராயன்-3 விண்கலத்தின் 2வது உயரம் உயர்த்தும் நடவடிக்கை

புதுடில்லி: வெற்றிகரமான மேற்கொள்ளப்படுகிறது... சந்திரயான் - 3 விண்கலத்தின் 2-வது உயரம் உயர்த்தும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் - 3 விண்கலம் தற்போது 41 ஆயிரத்து 603 கிலோ மீட்டருக்கு 226 கிலோ மீட்டர் தூரமுள்ள சுற்றுவட்டப் பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

chandrayaan,next level altitude,action,spacecraft,scientists ,சந்திராயன், அடுத்த கட்ட உயரம், நடவடிக்கை, விண்கலம், விஞ்ஞானிகள்

பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் - 3 விண்கலத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அடுத்த கட்ட உயரம் உயர்த்தும் நடவடிக்கை செவ்வாய் பிற்பகல் 2 முதல் 3 மணிக்குள் நடைபெறும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, தற்போது சந்திரயான் - 3 விண்கலம் நல்ல நிலையில் இயங்கி வருவதாகவும் கூறியுள்ளனர்.

Tags :
|