Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களின் காணொலி காட்சி மூலம் 2-வது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களின் காணொலி காட்சி மூலம் 2-வது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி

By: Karunakaran Fri, 09 Oct 2020 2:35:14 PM

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களின் காணொலி காட்சி மூலம் 2-வது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ம் தேதி அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான மைக் பென்சை எதிர்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

அமெரிக்க தேர்தலை பொறுத்தவரை அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்து நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பது நடைமுறை. அதிபர் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பைடனுக்கு இடையே கடந்த மாதம் 29-ந்தேதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின் அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

debate show,presidential candidates,united states,trump ,விவாத நிகழ்ச்சி, ஜனாதிபதி வேட்பாளர்கள், அமெரிக்கா, டிரம்ப்

கடந்த 2-ம் தேதி டொனால்டு டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கொரோனா பரிசோதனை செய்தபோது, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்கும் கொரோனா
தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் வரும் 15-ம் தேதி நடைபெறவிருந்த அதிபர் வேட்பாளர்களின் நேரடி விவாத நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடைபெறும் என அதிபர் தேர்தலுக்கான விவாத ஒருங்கிணைப்பு கமிஷன் தெரிவித்துள்ளது. டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து
குணமடையவில்லை என்றால் அவருடன் நேரடி விவாத்தில் ஈடுபடமாட்டேன் என இன்னும் ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :