Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்சாரம் பாய்ச்சி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது

மின்சாரம் பாய்ச்சி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது

By: Nagaraj Mon, 19 Oct 2020 10:30:45 PM

மின்சாரம் பாய்ச்சி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது

மூன்று பேர் கைது... ஊட்டி அருகே மின்சாரம் பாய்ச்சி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி வன கோட்டம், ஊட்டி வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னகுன்னூர் பகுதியில், கிழங்கு பயிர் செய்த இடத்தில், மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. வனக்காவலர் மகேந்திரன் பாண்டியன் ரோந்து பணிசென்ற போது, துர்நாற்றம் வீசியது. சந்தேகடைந்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

electricity,hidden,male elephant,stench ,மின்சாரம், மறைத்துள்ளது, ஆண் யானை , துர்நாற்றம்

உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். சின்னக் குன்னூர் அருகே பெந்தூர்பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன், கோபாலகிருஷ்ணன், உட்பட 3 பேர், கிழங்கு பயிர் செய்த இடத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் மின்சாரம் பாய்ச்சி, 20 வயது ஆண் யானையை கொன்றது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து உதவி வனப்பாதுகாவலர் சரவணன் கூறுகையில்," மின்சாரம் பாய்ச்சி யானை இறந்த இடத்தில், டிராக்டர் உதவியுடன் மண்ணை அரணாக போட்டு மறைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது." என்றார்.

மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலாகூறுகையில்," மின்சாரம் தாக்கி யானை இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் முழு தகவல் தெரியவரும் என்றார்.

Tags :
|