Advertisement

தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் 3 குழந்தைகள் பலி

By: Nagaraj Sat, 30 May 2020 2:09:15 PM

தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் 3 குழந்தைகள் பலி

மூன்று குழந்தைகள் பலி... கொரோனா பாதிப்பு அதிகரித்து சத்தீஸ்கரில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்த 3 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளால் மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு பலர் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் கடந்த 48 மணி நேரத்தில் மூச்சு திணறி 2 குழந்தைகளும் மற்றும் பிறந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை உட்பட 3 பேர் பாதிக்கப்பட்டு பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் இன்னும் வரவில்லை. நேற்று முன்தினம் 3 மாத குழந்தையும், 1.5 வயது குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பலியானது. முகாம்களில் பலியான குழந்தைகள் அனைத்தும் வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

corona,experiment,3 children,kills,isolation camp ,
கொரோனா, பரிசோதனை, 3 குழந்தைகள், பலி, தனிமை முகாம்

குழந்தைகளின் இறப்பிற்கு தனிமை முகாம்களில் தகுந்த பாதுகாப்பு வசதிகள் இல்லை. கடுமையான வெப்பம் மற்றும் காற்றோட்ட வசதியின்மை போன்ற சில காரணங்களால் தான் குழந்தைகள் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் கூறுகையில், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தகுந்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளில் குறை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசிற்கும் கடமை அதிகரித்து வருகிறது.

மே 14 முதல் தற்போது வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஒருவர் மின்சாரம் தாக்கியும் , இரண்டு பேர் பாம்புக் கடித்தும், 2 பேர் தற்கொலை செய்தும், மூன்று பேர் நோயாலும் இறந்துள்ளார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|