Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அரசு அலுவலகங்கள் 3 நாள் விடுமுறை

டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அரசு அலுவலகங்கள் 3 நாள் விடுமுறை

By: vaithegi Thu, 07 Sept 2023 1:02:50 PM

டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அரசு அலுவலகங்கள் 3 நாள் விடுமுறை

டெல்லி: 2023- ஆம் ஆண்டுக்கான ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களிலும் ஜி20 மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து தற்போது வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி நாட்டின் தலைநகரான டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிற்கு ஜி-20 நாடுகளின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், மேலும் பன்னாட்டு நிறுவன அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

holidays,school,colleges ,விடுமுறை ,பள்ளி, கல்லூரிகள்

இதனால் டெல்லி நகர் முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான கெடுபிடிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8 முதல் 10ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் 8-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் பள்ளிகளில் பாடங்களை முடிக்கும் விதமாக ஆன்லைன் வகுப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை நாட்களில் கல்வித்துறையின் ஊழியர்கள் யாரும் வெளியூர்களுக்கு பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :
|