Advertisement

3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை

By: vaithegi Thu, 06 Apr 2023 1:23:45 PM

3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ... தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் முறையே பொதுத்தேர்வு மற்றும் இறுதி தேர்வுகள் முறையே ஏப்ரல் 3ம் தேதி, 5-ம் தேதியில் முடிவடைந்தது.

இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 6ம் தேதியான இன்று முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதத்தின் நடுப்பகுதியில் தான் தேர்வுகள் தொடங்க உள்ளது.

continuous vacation,school,college ,தொடர் விடுமுறை, பள்ளி, கல்லூரி

இந்நிலையில், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 7-ம் தேதியான நாளை புனித வெள்ளி – அரசு விடுமுறை,

இதனை அடுத்து வருகிற 8-ம் தேதி 2-ம் சனிக்கிழமை விடுமுறை, 9ம் தேதி ஞாயிற்று கிழமை விடுமுறை வருகிறது. கொளுத்தும் கோடை வெயிலில் 3 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
|