Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மூணாறு நிலச்சரிவு: அழுகிய நிலையில் 2 பெண்கள் உள்பட 3 பேரின் உடல் மீட்பு

மூணாறு நிலச்சரிவு: அழுகிய நிலையில் 2 பெண்கள் உள்பட 3 பேரின் உடல் மீட்பு

By: Monisha Wed, 19 Aug 2020 11:20:11 AM

மூணாறு நிலச்சரிவு: அழுகிய நிலையில் 2 பெண்கள் உள்பட 3 பேரின் உடல் மீட்பு

மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கிய 2 பெண்கள் உள்பட 3 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கடந்த 7-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பில் இருந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் அந்த வீடுகளில் வசித்த 78 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 16 பேர் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடந்து வந்தது.

munnar,landslide,rescue troops,tea garden,workers ,மூணாறு,நிலச்சரிவு,மீட்பு படையினர்,தேயிலை தோட்டம்,தொழிலாளர்கள்

இந்த மீட்பு பணியில் இதுவரை மண்ணுக்குள் புதைந்து பலியான 58 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் 12-வது நாளான நேற்று பெட்டிமுடி கல்லார் ஆற்று கரையோரத்தில் பாறைகளின் இடுக்கில் சிக்கியிருந்த 2 பெண்கள், ஒரு ஆண் உடலை மீட்பு படையினர் மீட்டனர்.

3 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதன் மூலம் சாவு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags :
|