Advertisement

நாளை 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Thu, 08 Dec 2022 2:45:17 PM

நாளை 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்


சென்னை: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது, மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், கரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கிற்கு சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக் கொண்டுள்ளது.

இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்கக்கூடும். எனவே அதன் காரணமாக இன்று நாளை மற்றும் 10-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.

heavy rain,meteorological research centre. , அதிகனமழை,வானிலை ஆய்வு மையம்.

அதனை அடுத்து கனமழையை பொறுத்தவரை இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்ளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை சென்னை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளிக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இதையடுத்து 9-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 10-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேடை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

Tags :