Advertisement

3 மாவட்டங்களில் 21-ந்தேதி மிக கன மழை பெய்யக்கூடும்

By: vaithegi Fri, 18 Nov 2022 9:28:16 PM

3 மாவட்டங்களில்  21-ந்தேதி மிக கன மழை பெய்யக்கூடும்


சென்னை:வருகிற 21-ந்தேதி மிக கன மழை பெய்யக்கூடும் .... வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் இந்த குறைந்த காற்றழுத்தம் இன்று மேலும் வலுப்பெற தொடங்கி உள்ளது. தற்போது இந்த குறைந்த காற்றழுத்தம் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கி உள்ளது. நாளை (சனிக்கிழமை) அது காற்றழுத்த மண்டலமாக மாறும் போது மேலும் வலுவடையும். காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை நிலவரப்படி தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தென் மாவட்டங்களை நோக்கி நகர தொடங்கி இருக்கிறது. இது ஆந்திரா, தமிழகம் கடலோரத்தை நாளை மறுநாள் நெருங்க கூடும்.

குறைந்த காற்றழுத்தம் வட தமிழ்நாட்டை நெருங்கும்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 20-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை வட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

heavy rain,low pressure area , மிக கன மழை,காற்றழுத்த தாழ்வு பகுதி

அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த 3 மாவட்டங்களிலும் 21-ந்தேதி மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. அந்த சமயத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தனியார் வானிலை ஆய்வாளர்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள குறிப்பில், "தமிழகத்தின் வட மாவட்டங்களில் 20-ந்தேதி முதல் 22-ந்தேதி காலை வரை கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

Tags :