Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்தடுத்து 3 யானைகள் இறந்தன: 4 வனத்துறையினர் பணியிடை நீக்கம்

அடுத்தடுத்து 3 யானைகள் இறந்தன: 4 வனத்துறையினர் பணியிடை நீக்கம்

By: Nagaraj Sun, 14 June 2020 11:19:17 PM

அடுத்தடுத்து 3 யானைகள் இறந்தன: 4 வனத்துறையினர் பணியிடை நீக்கம்

அடுத்தடுத்து 3 யானைகள் இறந்தன... சட்டீஸ்கர் மாநில வனப்பகுதியில் கர்ப்பமாக இருந்த யானை உட்பட 3 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. இதையடுத்து 4 வனத்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தின் வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. சூரஜ்பூர் மாவட்டத்திலும் கடந்த 8 ம் தேதி கர்ப்பிணி யானையும் மற்றொரு யானையும் இறந்த நிலையில் கிடந்தன.

forests,elephants,subsequent deaths,workplace dismissa ,வனத்துறை, யானைகள், அடுத்தடுத்து இறந்தன, பணியிடை நீக்கம்

இதையடுத்து வனப்பகுதியையும், உயிரினங்களையும் சரியாக பராமரிக்காத காரணத்தால் 4 வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு யானை மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், மற்றொன்று தொற்றின் காரணமாகவும், 3வது யானையின் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களால் இறந்ததாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

எனினும் யானைகளின் மரணம் குறித்து விசாரிக்க மாநில வனத்துறை அமைச்சர் முகமது அக்பர் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

Tags :