Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரு நாடுகளில் முக கவசம் அணியாமல் வந்தால் அபராதத்துடன் 3 மாத சிறைத்தண்டனை

இரு நாடுகளில் முக கவசம் அணியாமல் வந்தால் அபராதத்துடன் 3 மாத சிறைத்தண்டனை

By: Monisha Mon, 18 May 2020 3:28:39 PM

இரு நாடுகளில் முக கவசம் அணியாமல் வந்தால் அபராதத்துடன் 3 மாத சிறைத்தண்டனை

குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் முக கவசம் அணியாமல் வந்தால் அபராதத்துடன் 3 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

kuwait,qatar,face shield,fines,imprisonment ,குவைத்,கத்தார்,முக கவசம்,அபராதம்,சிறைத்தண்டனை

இதுகுறித்து குவைத்தின் சுகாதார மந்திரி கூறும்போது, “யாராவது முகக்கவசம் அணியாமல் பிடிபட்டால் அவர்கள் 3 மாத சிறை தண்டனையை சந்திக்க நேரிடும்” என்ற கூறி உள்ளார். மேலும் குவைத்தில் அபாரதமாக அந்நாட்டு பணமாக தினாருக்கு 5 ஆயிரம் விதிக்கப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு குவைத்தில் இதுவரை 112 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

kuwait,qatar,face shield,fines,imprisonment ,குவைத்,கத்தார்,முக கவசம்,அபராதம்,சிறைத்தண்டனை

இதேபோல் கத்தாரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று அந்தநாட்டு டி.வி.சானல் ஒன்று தெரிவித்து உள்ளது. கத்தாரில் அந்நாட்டு பணம் ரியால் 2 லட்சம் விதிக்கப்படுகிறது.

கொரோனா வைரசுக்கு கத்தார் நாட்டில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Tags :
|
|
|