Advertisement

ஜப்பானில் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் திருடிய 3 பேர் கைது

By: Nagaraj Thu, 11 May 2023 6:54:36 PM

ஜப்பானில் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் திருடிய 3 பேர் கைது

ஜப்பான்: ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் திருட்டு... ஜப்பானில் கடை ஒன்றுக்குள் புகுந்த வாலிபர்கள் 3 பேர் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை திருடிச் சென்றனர்.

டோக்கியோவில் ரோலக்ஸ் கடிகாரங்களை விற்கும் அந்த கடைக்குள் முகமூடி அணிந்து அந்த 3 பேரும் புகுந்தனர்.

rolex,watch,theft,rescue,police,arrest ,ரோலக்ஸ், வாட்ச், திருட்டு, மீட்பு, போலீசார், கைது

கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டிய அவர்கள், கண்ணாடி பேழைகளை உடைத்து, காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த நூறு உயர் ரக வாட்ச்களை திருடிக் கொண்டு கடை வாசலில் தயாராக இருந்த காரில் தப்பிச் சென்றனர்.

வாட்ச் கொள்ளையர்களின் காரை சிறிது தொலைவிலேயே போலீசார் சுற்றிவளைத்தனர். உள்ளே இருந்த 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 4 பேரை கைது செய்து கைக்கடிகாரங்களை மீட்டனர்.

Tags :
|
|
|
|
|