Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது

திருச்சி மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது

By: Nagaraj Sun, 17 Sept 2023 07:24:14 AM

திருச்சி மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது

சென்னை: இன்று திருச்சி மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி விட்டாலே டெங்கு காய்ச்சல் வேகமெடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனை அடுத்து நடப்பு மாதத்தில் மட்டும் சுமார் 120-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

dengue,trichy,dengue,trichy,affected,people,tamil nadu ,டெங்கு , திருச்சி, பாதிப்பு, மக்கள், தமிழகம்

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது. அதை தொடர்ந்து மதுரையில் 20 குழந்தைகள் உட்பட 61 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் மக்கள்பெரும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். தொற்று பரவும் வேகத்தை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை தடுப்பு பணிகளை வேகப்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த டெங்கு பாதிப்புகள் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

Tags :
|
|
|
|
|