Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மன்னர் சார்லஸ் பிறந்தநாள் அணிவகுப்பு ஒத்திகையில் மயங்கி விழுந்த 3 வீரர்கள்

மன்னர் சார்லஸ் பிறந்தநாள் அணிவகுப்பு ஒத்திகையில் மயங்கி விழுந்த 3 வீரர்கள்

By: Nagaraj Sun, 11 June 2023 4:16:20 PM

மன்னர் சார்லஸ் பிறந்தநாள் அணிவகுப்பு ஒத்திகையில் மயங்கி விழுந்த 3 வீரர்கள்

லண்டன்: மயங்கி விழுந்தனர்... லண்டனில் மன்னர் சார்லஸின் பிறந்த நாளின் போது நடக்க உள்ள அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையின் போது வெயில் தாங்காமல் வீரர்கள் 3 பேர் மயங்கிச் சரிந்தனர்.

வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ள அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையை இளவரசர் வில்லியம் நேரில் பார்வையிட்டார்.

rehearsal,passed out,example,birthday,players ,ஒத்திகை, மயங்கி விழுந்தனர், எடுத்துக்காட்டு, பிறந்தநாள், வீரர்கள்

அப்போது வெயிலை தாக்குப்பிடிக்க இயலாத ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டார். மயங்கிய 2 பேர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டனர்.

கடும் வெயிலில் ஒத்திகையில் பங்கேற்ற அனைவருக்கும் இளவரசர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலுக்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Tags :