Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு முழுவதும் 3 ஆயிரத்து 60 ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கம் - ரெயில்வே நிர்வாகம் தகவல்

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 60 ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கம் - ரெயில்வே நிர்வாகம் தகவல்

By: Monisha Tue, 26 May 2020 09:15:44 AM

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 60 ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கம் - ரெயில்வே நிர்வாகம் தகவல்

நாடு முழுவது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். எனவே பாதிக்கப்பட்டவர்ளை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, பல்வேறு நகரங்களில் இருந்து ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் மூலம் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

ரெயில்வே நிர்வாகம் அளித்துள்ள தகவலின் படி நாடு முழுவதும் தற்போது வரை 3 ஆயிரத்து 60 ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு காலத்தில் இயக்கப்பட்ட இந்த ரெயில்கள் மூலமாக இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றடைந்துள்ளனர்.

sharamic special trains,railway administration,migrant workers,hometown,curfew ,ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள்,ரெயில்வே நிர்வாகம்,புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,சொந்த ஊர்,ஊரடங்கு

அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரெயில்கள் பயணத்தை தொடங்கிய மாநிலம்
குஜராத் - 853 ரெயில்கள்
மகாராஷ்டிரா - 550 ரெயில்கள்
பஞ்சாப் - 333 ரெயில்கள்
உத்தரபிரதேசம் - 221 ரெயில்கள்
டெல்லி - 181 ரெயில்கள்

அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரெயில்கள் பயணத்தை முடித்த மாநிலம்
உத்தரபிரதேசம் - 1,245 ரெயில்கள்
பீகார் - 846 ரெயில்கள்
ஜார்க்கண்ட் - 123 ரெயில்கள்
மத்திய பிரதேசம் - 112 ரெயில்கள்
ஒடிசா - 73 ரெயில்கள்

Tags :