Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பாதை இணைப்பு பணிகள் காரணமாக ரத்து

மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பாதை இணைப்பு பணிகள் காரணமாக ரத்து

By: vaithegi Sat, 18 Mar 2023 5:57:10 PM

மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பாதை இணைப்பு பணிகள் காரணமாக ரத்து

சென்னை: தொலைதூர பயணங்களுக்கு மக்களுக்கு வசதியான பொது போக்குவரத்து ரயில் தான். மேலும் ஏழை எளிய மக்கள் முதல் வசதியானவர்கள் என்று அனைவரும் ரயில் பயணங்களை விரும்புகின்றனர். இந்த நிலையில் திருவனந்தபுரம் கோட்டத்தில் மேலப்பாளையம்-நாங்குநேரி இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

எனவே அதன் காரணமாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் நாகர்கோவில் அந்தியோதயா ரயில் மார்ச் 23 ஆம் தேதி வரையும், நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம்அந்தியோதயா ரயில் நாளை முதல் வருகிற மார்ச் 24 -ம் தேதி வரையும், நெல்லை – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

trains,trains,cancellations ,ரயில்கள் ,ரயில்கள் ,ரத்து

மேலும் இந்த ரயில் நெல்லையில் இருந்து மாலை 5.05க்கு புறப்படும் எனவும், திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் இரு மார்க்கங்களிலும் நாளை முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை, நெல்லை வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் நெல்லையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் எனவும், மார்ச் 22-ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் மற்றும் நாகர்கோவிலில் இருந்து வரும் மார்ச் 23-ம் தேதி புறப்படும் எனவும், தாம்பரம் வாரம் மும்முறை சேவை ரயில் ஆகியவை விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னை எழும்பூரில் இருந்து வரும் ரயில் மார்ச் 23-ம் தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாராந்திர சேவை விரைவு ரயில் மற்றும் வரும் மார்ச் 24 -ம் தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரயில் ஆகியவை விருதுநகரில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

Tags :
|
|