Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் பதுங்கல்... லெப்டினன்ட் ஜெனரல் தகவல்

காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் பதுங்கல்... லெப்டினன்ட் ஜெனரல் தகவல்

By: Nagaraj Wed, 23 Nov 2022 6:33:48 PM

காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் பதுங்கல்... லெப்டினன்ட் ஜெனரல் தகவல்

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் சுமார் 300 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர், ஆனால் அவர்களால் எந்த தாக்குதலையும் நடத்த முடியாது என்பதை உறுதி செய்து வருகிறோம் என்று லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க இந்திய ராணுவம் 1948 ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் இசி’ என்ற பெயரில் நடத்திய நடவடிக்கையின் 75வது ஆண்டு நினைவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தலைமையில், பூஞ்ச் மாவட்ட மக்களும் ராணுவத்தினரும் உற்சாகமாக கொண்டாடினர். அதன் பிறகு உபேந்திர திவேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

army officer,kashmir,terrorist, ,உபேந்திர திவேதி, காஷ்மீர், தீவிரவாதிகள்

அப்போது அவர் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் சுமார் 300 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர், ஆனால் அவர்களால் எந்த தாக்குதலையும் நடத்த முடியாது என்பதை உறுதி செய்து வருகிறோம்.

யூனியன் பிரதேச நிர்வாகம் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கும் சிறப்பான பணியை செய்து வருகிறது. என்று கூறியுள்ளார்.

Tags :