Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 300 யூனிட் இலவச மின்சாரம், இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம்... பறக்கும் வாக்குறுதிகள்

300 யூனிட் இலவச மின்சாரம், இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம்... பறக்கும் வாக்குறுதிகள்

By: Nagaraj Mon, 21 Aug 2023 6:43:52 PM

300 யூனிட் இலவச மின்சாரம், இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம்... பறக்கும் வாக்குறுதிகள்

மத்தியபிரதேசம்: மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், 300 யூனிட் இலவச மின்சாரம், இலவச மருத்துவம் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3000 உட்பட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், 300 யூனிட் இலவச மின்சாரம், இலவச மருத்துவம் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3000 உட்பட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

promises,free medical treatment,schools,free electricity ,வாக்குறுதிகள், இலவச மருத்துவ சிகிச்சை, பள்ளிக்கூடங்கள், இலவச மின்சாரம்

ஆட்சியைப் பிடிப்பதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் சத்னா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். அதில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை கடுமையாக சாடியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ’’மத்திய பிரதேசத்தில் 300 யூனிட் இலவச மின்சாரம், இலவச மருத்துவ சிகிச்சை, தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்கள் கட்டப்படும். அத்துடன் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும்’’ என்பது உட்பட பல வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்தார்.

ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப்பில் இதுபோன்ற பல வாக்குறுதிகளை வழங்கி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது போல் தொடர்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியும் வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :