Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு

அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு

By: Karunakaran Tue, 28 July 2020 5:05:39 PM

அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பல நாடுகள் மேற்கொண்டாலும் கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை. தடுப்பூசி ஒன்றை இதற்கு தீர்வளிக்கும் என கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் பல நாடுகள் தொடக்ககட்ட வெற்றியை ஈட்டியுள்ளன. இதனால் இந்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன.அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி ஏற்கனவே தொடக்ககட்ட சோதனைகளை முடித்திருந்தநிலையில், தற்போது இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது.

30000 volunteers,united states,corona  vaccine,final testing ,30000 தன்னார்வலர்கள், அமெரிக்கா, கொரோனா தடுப்பூசி, இறுதி சோதனை

அமெரிக்கா முழுவதிலும் இருந்து 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு உண்மையான மருந்தும், மீதமுள்ளவர்களுக்கு போலி மருந்தும் செலுத்தப்பட்டது. ஒரே முறையாக 30 ஆயிரம் பேரிடம் தடுப்பூசி பரிசோதனை நடத்துவது முக்கியமான சாதனையாகும்.

இந்த தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையை எட்டியிருப்பினும், இது பாதுகாப்பானதா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த தடுப்பூசியின் முதற்கட்ட சோதனையில் பங்கேற்றவர்களுக்கு காய்ச்சல், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி போன்ற சின்னச்சின்ன பக்க விளைவுகள் ஏற்பட்டன. இருப்பினும், இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Tags :