Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் விடுமுறை ..ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 30% அதிகரிப்பு

தொடர் விடுமுறை ..ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 30% அதிகரிப்பு

By: vaithegi Fri, 11 Aug 2023 2:56:01 PM

தொடர் விடுமுறை  ..ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 30% அதிகரிப்பு

சென்னை: ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது .... தமிழகத்தில் வழக்கமாகவே வார இறுதி தினங்கள், பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும்.

இதையடுத்து இத்தகைய நிலையில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு அரசு சார்பாக கூடுதல் ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.எனினும் தனியார் பேருந்துகளில் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நேரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

omni bus,serial holiday ,ஆம்னி பேருந்து,தொடர் விடுமுறை

தற்போது தமிழகத்தில் வருகிற ஆக.12, 13, 15 ஆகிய 3 நாட்கள் விடுமுறை வரவுள்ளதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்கத் தொடங்கி விட்டனர்.இதனால் அதிகரிக்கும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை 30% வரை உயர்த்தி உள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அதே போன்று சிறப்பு ரயில்களின் முன்பதிவு முடிந்து விட்டது. பலரும் டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்பு பட்டியலில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :