Advertisement

ஒரே நாளில் கனடாவில் கொரோனாவால் 321 பேர் பாதிப்பு

By: Nagaraj Sat, 11 July 2020 3:21:11 PM

ஒரே நாளில் கனடாவில் கொரோனாவால் 321 பேர் பாதிப்பு

உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி கோர தாண்டவம் ஆடி வருகிறது கொரோனா வைரஸ். கனடாவில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 321பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகி உள்ளனர் என்று சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக கனடா உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 7 ஆயிரத்து 126ஆக உயர்ந்துள்ளது. மேலும் எட்டு ஆயிரத்து 759பேர் உயிரிழந்துள்ளனர்.

canada,corona,mask,forced,number of casualties ,கனடா, கொரோனா, முகக்கவசம், கட்டாயம், பலி எண்ணிக்கை

மருத்துவமனைகளில் 27 ஆயிரத்து 466பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 70 ஆயிரத்து 901 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இரண்டு ஆயிரத்து 155பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கனடாவில் பல மாகாணங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது பலவித தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடைகள் உட்பட உள்பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|