Advertisement

கொரோனா வழிகாட்டு நெறிகளை பின்பற்றாத 33 மாநிலங்கள்

By: Nagaraj Mon, 31 Aug 2020 12:51:55 PM

கொரோனா வழிகாட்டு நெறிகளை பின்பற்றாத 33 மாநிலங்கள்

பின்பற்றவில்லை... அமெரிக்காவில் 33 மாநிலங்கள் கொரோனா பரிசோதனைக்காக ட்ரம்ப் நிர்வாகம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் குறையாத நிலையில் மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அண்மையில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில், அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என அறிவித்தது.

trump,administration,distrust,experts,contradiction ,டிரம்ப், நிர்வாகம், அவநம்பிக்கை, வல்லுநர்கள், முரண்பாடு

இதனை பெரும்பாலான மாநில அரசுகளும் உடனடியாக அமல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த முரண்பாடு, ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான அவநம்பிக்கையை காட்டுவதாக சுகாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் இதுபோன்ற தகவல்கள் ட்ரம்ப் மீதான நம்பிக்கை அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது என்றே தெரிகிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் தொடர்ந்து அமெரிக்கா இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Tags :
|