Advertisement

சென்னையில் 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Tue, 16 June 2020 11:08:22 AM

சென்னையில் 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,364 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நேற்று 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 382 பேர் உயிரிழந்துள்ளனர்.

india,coronavirus,tamil nadu,chennai ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,364 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 3,539 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,992 பேருக்கும், அண்ணாநகரில் 3,330 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 4,226 பேரும், தேனாம்பேட்டையில் 4,031 பேரும், திருவொற்றியூரில் 1,224 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,413 பேருக்கும், பெருங்குடியில் 630 பேருக்கும், அடையாறில் 1,885 பேருக்கும், அம்பத்தூரில் 1,148 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 670 பேருக்கும், மாதவரத்தில் 894 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 615 பேருக்கும், மணலியில் 470 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags :
|