Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் 35 சதவீத நிராகரிப்பு .. காரணம் இந்த முதல் குறுஞ்செய்தியில் அனுப்ப ஏற்பாடு

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் 35 சதவீத நிராகரிப்பு .. காரணம் இந்த முதல் குறுஞ்செய்தியில் அனுப்ப ஏற்பாடு

By: vaithegi Wed, 13 Sept 2023 1:39:30 PM

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் 35 சதவீத நிராகரிப்பு  .. காரணம் இந்த முதல் குறுஞ்செய்தியில் அனுப்ப ஏற்பாடு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களில் 35 சதவீதம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில்,காரண விவரம் அடங்கிய குறுஞ்செய்தியைவ வருகிற செப்.15 முதல் அனுப்ப நடவடிக்கை ...தமிழக அரசின் சார்பில் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வருகிற செப்.15-ம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்துக்காக உரிய வழிகாட்டுதல்கள் மற்றும்விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்வெளியிடப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதையடுத்து, தமிழக அரசுதன்னிடம் உள்ள தரவுகள் அடிப்படையில், விண்ணப்பங்களை தகுதி அடிப்படையில் பரிசீலித்தது. இதில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 56.50 லட்சம்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட் டுள்ளன.அதிலும் குறிப்பாக, அரசு மற்றும் அரசுசார்ந்த பணியில் இருந்து விண்ணப்பித்த 3 லட்சத்துக்கும் அதிக மானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுதவிர, ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள், கார், ஜீப் மற்றும் கனரக வாகனங்கள் வைத்திருப்போர், ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல்மின் நுகர்வு கொண்ட குடும்பங் களிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களும் விதிகள் படி நிராகரிக்கப்பட்டுவுள்ளன.

womens rights amount,sms ,மகளிர் உரிமைத் தொகை,குறுஞ்செய்தி

தமிழக அரசிடம் ஏற்கெனவே, வருமான வரி செலுத்தும் 35 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விவர பட்டியல், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவாகும் வாகனங்கள் பற்றிய விவரங்கள், 3600 யூனிட்டுக்கு மேல் மி்ன்நுகர்வு செய்யும் 9.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரது பட்டியல்கள் உள்ளன. இவற்றை கொண்டும், சந்தேகமிருந்தால் கள ஆய்வின் மூலமும்சரிபார்த்து தற்போது தகுதியான பயனாளிகள் பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வரும் செப்.15-ம்தேதியில் இருந்து தகுதியானபயனாளிகள் மற்றும் நிராகரிக் கப்பட்ட விண்ணப்பங்களுக்கான காரணங்கள் தொடர்பான குறுஞ்செய்திகளை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதவிர, பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெறும் அரங்குகளிலும், அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக, சிறப்பு திட்ட செயலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.





Tags :