Advertisement

சென்னையில் 35 ஆயிரத்து 556 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Thu, 18 June 2020 1:36:15 PM

சென்னையில் 35 ஆயிரத்து 556 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,174 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து 50,193 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 35 ஆயிரத்து 556 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 461 பேர் உயிரிழந்துள்ளனர்.

india,coronavirus,tamil nadu,madras,influence ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை,பாதிப்பு

இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,626 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 3,801 பேருக்கும், திரு.வி.க.நகரில் 3,160 பேருக்கும், அண்ணாநகரில் 3,636 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 4,549 பேரும், தேனாம்பேட்டையில் 4,334 பேரும், திருவொற்றியூரில் 1,324 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,497 பேருக்கும், பெருங்குடியில் 684 பேருக்கும், அடையாறில் 2,069 பேருக்கும், அம்பத்தூரில் 1,243 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 736 பேருக்கும், மாதவரத்தில் 955 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 677 பேருக்கும், மணலியில் 503 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags :
|
|