Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடந்து வருவதால் .....35 ரயில் சேவைகள் ரத்து

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடந்து வருவதால் .....35 ரயில் சேவைகள் ரத்து

By: vaithegi Fri, 17 June 2022 6:27:14 PM

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடந்து வருவதால் .....35 ரயில் சேவைகள் ரத்து

இந்தியா: இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் அனைத்து துறைகளும் கடுமையான பெரும் சரிவை சந்தித்தது. அந்த வகையில் மற்ற துறைகளை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையும் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டது.ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை இன்றி காணப்பட்டதால் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரயில்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது. தொற்று முழுமையாக குறையாத நிலையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தடுக்க ரயில்வே துறை முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆன்லைன் வாயிலாக ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. தற்போது ரயில்கள் வழக்கம் போல இயங்கி வரும் நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் 2 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டது.

agnipath,trains,irctc ,அக்னிபாத் ,ரயில்கள் ,ஐஆர்சிடிசி

இதனை தற்போது ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் எனும் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்களும், இளம்பெண்களும் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களின் விருப்பம், பணித் திறன் ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்துக்கு வட இந்திய மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பு வருகிறது.

பீகாரில் ராணுவ வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ரயில்களுக்கு தீ வைத்துள்ளனர். அதனால் தற்போது 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Tags :
|