Advertisement

கனடாவில் ஒரே நாளில் கொரோனாவால் 355 பேர் பாதிப்பு

By: Nagaraj Mon, 27 July 2020 7:29:26 PM

கனடாவில் ஒரே நாளில் கொரோனாவால் 355 பேர் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 355பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 13ஆயிரத்து 911 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை எட்டு ஆயிரத்து 890 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்து 666பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 99 ஆயிரத்து 355பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பிரேசிலில் சமீபகாலமாக நாளொன்றில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 23,467 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. அத்துடன் 716 பேர் உயிரிழந்துள்ளனர்.

canada,brazil,corona,vulnerability,health ,கனடா, பிரேசில், கொரோனா, பாதிப்பு, சுகாதாரத்துறை

உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பினை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை மொத்தமாக 24 இலட்சத்து 19ஆயிரத்து 901பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 87ஆயிரத்து 52பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, ஆறு இலட்சத்து 98ஆயிரத்து 575பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 16 இலட்சத்து 34ஆயிரத்து 274பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|
|
|