Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து 3.59 லட்சம் பேர் குணம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து 3.59 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Thu, 02 July 2020 11:43:16 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து 3.59 லட்சம் பேர் குணம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது சற்று ஆறுதலடைய செய்கிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 19148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இதுவரை 604641 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona virus,india,corona prevence,corona infection ,கொரோனா வைரஸ், இந்தியா, கொரோனா தடுப்பு, கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக 434 பேர் மரணம் அடைந்துள்ளதால், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17834 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 11881 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 359860 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடைய 226947 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாட்டிலே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிராவில் 180298 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|