Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்தியப் பிரதேசத்தில் அரசு வேலைகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு

மத்தியப் பிரதேசத்தில் அரசு வேலைகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு

By: vaithegi Thu, 05 Oct 2023 5:54:16 PM

மத்தியப் பிரதேசத்தில் அரசு வேலைகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு

மத்தியப் பிரதேசம் : இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால், தேசிய கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நோக்கில் தீவிரமாக செயல்பட்டு கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அரசு பணிகளில் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது.

allotment,govt job ,ஒதுக்கீடு,அரசு வேலை

மேலும் காவல்துறை மற்றும் பிற அரசுப் பணிகளில் 35 சதவீத காலிப் பணியிடங்கள் பெண்களைக் கொண்டு நிரப்பப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்து உள்ளார். ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அரசு அளிக்கும் என்று கூறி உள்ளார்.

அதாவது, வனத் துறையைத் தவிர்த்து, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்க, 1997ல் மத்தியப் பிரதேச அரசு பணியாளர் சட்டத்திலிருக்கும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துவுள்ளது.

Tags :