Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடமாநிலங்களில் நிலச்சரிவு ,அதிக மழை காரணமாக கடந்த 2 நாட்களில் 37 பேர் உயிரிழப்பு

வடமாநிலங்களில் நிலச்சரிவு ,அதிக மழை காரணமாக கடந்த 2 நாட்களில் 37 பேர் உயிரிழப்பு

By: vaithegi Tue, 11 July 2023 1:13:56 PM

வடமாநிலங்களில் நிலச்சரிவு ,அதிக மழை காரணமாக கடந்த 2 நாட்களில் 37 பேர் உயிரிழப்பு


இந்தியா: வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழைக்கு இதுவரை 37 பேர் பலியாகி இருப்பதாக தகவல் .... இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம்,ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 8 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது.இதையடுத்து இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

loss of life,landslides,heavy rains ,உயிரிழப்பு ,நிலச்சரிவு ,அதிக மழை


எனவே அதன் படி நேற்று முன்தினம் காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 153 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். மேலும் கடந்த 1982 -ம் ஆண்டு ஜூலைக்கு பின் அதிக மழை பொலிவு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் கடந்த 2010 -ம் ஆண்டு மேகவெடிப்பு ஏற்பட்ட போது கூட இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் இம்முறை பழைய கட்டிடங்கள் பல சேதமடைந்து இருக்கிறது.

வடமாநிலங்களில் நிலச்சரிவு மற்றும் அதிக மழை காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் 37 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். மேலும் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் மண்டி, கிண்ணார் மற்றும் லஹால்ஸ்பிடி நகரங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. அம்மாநிலங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. அதே போன்று டெல்லி யமுனா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் நீர்மட்டம் 206.24 மீட்டராக உள்ளது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.


Tags :