Advertisement

சென்னையில் 37 ஆயிரத்து 070 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Fri, 19 June 2020 11:47:31 AM

சென்னையில் 37 ஆயிரத்து 070 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 28 ஆயிரத்து 641 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 625 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 37 ஆயிரத்து 070 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை அங்கு 501 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

tamil nadu,coronavirus,chennai,vulnerability,curfew ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சென்னை,பாதிப்பு,ஊரடங்கு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,828 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 3,959 பேருக்கும், திரு.வி.க.நகரில் 3,244 பேருக்கும், அண்ணாநகரில் 3,820 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 4,743 பேரும், தேனாம்பேட்டையில் 4,504 பேரும், திருவொற்றியூரில் 1,370 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 1,571 பேருக்கும், பெருங்குடியில் 729 பேருக்கும், அடையாறில் 2,144 பேருக்கும், அம்பத்தூரில் 1,305 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 781 பேருக்கும், மாதவரத்தில் 999 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 707 பேருக்கும், மணலியில் 525 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags :