Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப 3,790 பஸ்கள் இயக்கம்

வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப 3,790 பஸ்கள் இயக்கம்

By: vaithegi Tue, 25 Oct 2022 1:45:03 PM

வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப 3,790 பஸ்கள் இயக்கம்

சென்னை : பொதுவாக சென்னைக்கு இயக்கப்படும் 2,100 பேருந்துகள் மற்றும் கூடுதலாக 1,678 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 3,778 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விட்டுள்ளதால், பலர் நாளை சொந்த ஊருக்கு கிளம்ப திட்டமிட்டுள்ளனர். அதனால் நாளை (அக். 26) 2,954 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

buses,chennai ,பஸ்கள் ,சென்னை

இதனை அடுத்து இன்று சென்னைக்கு கிளம்ப 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், தீபாவளிக்காக சிறப்பு பஸ்கள் மூலம் 6 லட்சம் பேரும், ஆம்னி பஸ்கள் வழியாக 1.5 லட்சம் பேரும், ரயில்கள் மூலமாக 12 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கார், வேன், விமானம் மூலம் 1 லட்சத்திற்கு அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|