Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 385 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது - உள்துறை மந்திரி தகவல்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 385 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது - உள்துறை மந்திரி தகவல்

By: Monisha Thu, 21 May 2020 09:40:52 AM

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 385 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது - உள்துறை மந்திரி தகவல்

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மார்ச்-25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களே. வேலையையும், வாழ்வாதாரத்தையும் இழந்த அவர்கள் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டனர். இதில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு பலர் தங்கள் உயிரையும் பறிகொடுத்தனர். எனவே, இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அவர்களுக்காக கடந்த வாரங்களில் இருந்து சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.

இதுகுறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியதாவது:- புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல உதவும் வகையில் 325 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று மாலை மாநிலத்தில் பல்வேறு ரெயில் நிலையங்களில் இருந்து மேலும் 60 சிறப்பு ரெயில்கள் புறப்பட்டு உள்ளன.

migrant workers,special trains,minister anil deshmukh,mumbai,hometown ,புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்,சிறப்பு ரெயில்கள்,மந்திரி அனில் தேஷ்முக்,மும்பை,சொந்த ஊர்

இந்த 385 சிறப்பு ரெயில்கள் மூலம் சுமார் 5 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி உள்ளனர். இதில் 187 ரெயில்கள் உத்தரபிரதேசத்திற்கும், பீகருக்கு 44 ரெயில்களும், மத்திய பிரதேசத்திற்கு 33 ரெயில்களும், 13 ரெயில்கள் ராஜஸ்தானுக்கும், இதர ரெயில்கள் நாட்டில் மற்ற மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்பதால் அவர்கள் பயண கட்டணம் செலுத்த தேவையில்லை என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறேன். மும்பையில் உள்ள 93 போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் புலம்பெர்ந்த தொழிலாளர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் பணி சுமை அதிகரித்துள்ளது. எனவே அவர்களுக்கு உதவ 1,500 ஊழியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது அவர்களின் வேலை பளுவை சற்று குறைக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|