Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து 39 லட்சம் பேர் குணம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து 39 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Sat, 13 June 2020 09:34:32 AM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து 39 லட்சம் பேர் குணம்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகில் 215க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 77 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 830-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

coronavirus,america,worldwide,china,human disaster ,கொரோனா,அமெரிக்கா,சீனா,மனித பேரழிவு

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. இதனால் பல கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். தற்போது வரை கொரோனா வைரஸு க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவிலிருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சுய தனிமைப்படுத்தல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வேறு வைரஸு க்கான மருந்து மூலம் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அறிகுறிகள் அற்ற கொரோனா வைரஸ்
சிலருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது மற்றவர்களுக்கு பரவுவது குறைவு என தெரிய வந்துள்ளது.

Tags :
|