Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 394 தங்கக் கட்டிகள் மீட்பு

இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 394 தங்கக் கட்டிகள் மீட்பு

By: Nagaraj Wed, 21 Sept 2022 4:50:26 PM

இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 394 தங்கக் கட்டிகள் மீட்பு

புதுடில்லி: 394 தங்க கட்டிகள் மீட்பு... வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 394 தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்டு பாட்னா, மும்பை, டில்லியில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வுத் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

trafficking,incident,confiscation,revenue,intelligence department,gold bullion ,கடத்தல், சம்பவம், பறிமுதல், வருவாய், புலனாய்வுத் துறை, தங்கக்கட்டி

இந்த சோதனைகளில், 65.64 கிலோ எடையுள்ள 394 வெளிநாட்டு தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 33.40 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சமீபகாலமாக நடத்தப்பட்ட கடத்தல்களில், இதுவே மிகப்பெரிய கடத்தல் சம்பவம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :