Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தகுதித் தேர்வில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி

நீட் தகுதித் தேர்வில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி

By: vaithegi Sun, 18 June 2023 2:17:06 PM

நீட் தகுதித் தேர்வில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி

இந்தியா: நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் 11 லட்சத்து 45,976 (56.21%) மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 78,693 (54.45%) பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் இதுதவிர தமிழக மாணவர் ஜே.பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்து அசத்தி உள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

government school students,neet exam ,அரசுப் பள்ளி மாணவர்கள், நீட் தேர்வு

நடப்பாண்டு நீட் தேர்வை அரசுப்பள்ளி மாணவர்கள் 12,997 பேர் எழுதினர். அதில் 3,982 (30.67%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகம். சென்ற ஆண்டு 14,979 மாணவர்கள் நீட் தேர்வெழுதியதில் 4,118 (27%) பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும், மாவட்ட அளவிலான தேர்ச்சியில் அதிகபட்சமாக சேலத்தில் 519 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.

இதனை அடுத்து கிருஷ்ணகிரியில் 235 பேரும், ஈரோடு, கள்ளக்குறிச்சியில் தலா 209 பேரும், காஞ்சிபுரத்தில் 202 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக தென்காசியில் 335 பேர் தேர்வில் பங்கேற்றதில் வெறும் 9 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர் என அதில் கூறப்பட்டு உள்ளது.கடந்தாண்டு அனுபவங்களில் அடிப்படையில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மேம்படுத்தப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :