Advertisement

ஒரே நாளில் கனடாவில் 399 பேர் பாதிப்பு; 9 பேர் பலி

By: Nagaraj Tue, 07 July 2020 5:59:51 PM

ஒரே நாளில் கனடாவில் 399 பேர் பாதிப்பு; 9 பேர் பலி

ஒரே நாளில் 399 பேர் பாதிப்பு... கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 399பேர் பாதிப்படைந்ததோடு, 9பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 5 ஆயிரத்து 935ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 693பேர் உயிரிழந்துள்ளனர்.

corona,vulnerable,worried,overnight,healed ,கொரோனா, பாதிப்பு, கவலைக்கிடம், ஒரே நாள், குணமடைந்து

மேலும், 27,672பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 69,570பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,128பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய கொரோனா வைரஸ், மனிதனின் சுவாச பாதையில் பாதிப்பை உண்டாக்கி அதன் மூலம் மரணத்தை விளைவிக்கும் உயிர்க்கொல்லி ஆகும். கொரோனா பரவலை தடுக்க கனடா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

Tags :
|