Advertisement

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 26 July 2022 1:28:13 PM

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

சேலம் : இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களுள் ஒருவர் தியாகி தீரன் சின்னமலை இவர் ஈரோடு மாவட்டம் காங்கயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் பிறந்தவர். தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள் பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் ஆகிய கலைகளில் ஆர்வம் காட்டினார். மேலும் நாட்டில், ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்துவது துளியும் விரும்பாத இவர் அவர்களை எதிர்க்க தொடங்கினார். பல போராட்டங்களில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்தார். இவர் திப்பு சுல்தானின் வெற்றிகளில் முக்கியப் பங்கு வகித்தார்.

மேலும் அறச்சலூர் போன்ற இடங்களில் நடைபெற்ற போர்களில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டவர். பிறகு பிரிட்டிஷாரால் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார். இவரது நினைவு நாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

local holiday,salem ,உள்ளூர் விடுமுறை,சேலம்

மேலும் அத்துடன் அன்றைய தினம் ஆடிப்பெருக்கு விழாவும் கொண்டாடப்பட்ட உள்ளது. நீரின்றி அமையாது என்ற வள்ளுவரின் குறளுக்கு இணங்க ஆண்டுதோறும் ஆடி மாதம் அன்று நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடி பெருக்கு அன்று நீர் நிலைகளில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனால் இதனை முன்னிட்டும் சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் வராது என்பதால் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற செப்டம்பர் மாதம் 17ம் தேதி பணி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :