Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அபுதாபி மினா ஜாயித் பகுதியில் 4 கட்டிடங்கள் வெடிவைத்து 10 வினாடிகளில் தகர்ப்பு

அபுதாபி மினா ஜாயித் பகுதியில் 4 கட்டிடங்கள் வெடிவைத்து 10 வினாடிகளில் தகர்ப்பு

By: Karunakaran Sat, 28 Nov 2020 6:36:16 PM

அபுதாபி மினா ஜாயித் பகுதியில் 4 கட்டிடங்கள் வெடிவைத்து 10 வினாடிகளில் தகர்ப்பு

அபுதாபியில் மினா ஜாயித் பகுதியானது புதிய சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மேம்படுத்தப்பட உள்ளது. ‘மீனா பிளாசா’ வளாகத்தில் கட்டப்பட்டு இருந்த 4 டவர்ஸ் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடற்கரை பகுதி அருகே பாதியில் கைவிடப்பட்ட அந்த 4 கட்டிடங்களில் மொத்தம் 144 தளங்கள் உள்ளது.

அபுதாபி மாநகராட்சி சார்பில் அந்த பகுதி கையகப்படுத்தப்பட்டு சுற்றுலா மேம்பாட்டு பகுதியாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த கட்டிடங்களை இடிக்க ஏற்கனவே இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. சோதனை வெற்றியடைந்ததால், நேற்று கட்டிட இடிப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்பில் அந்த 4 கட்டிடங்களும் போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே வெற்றிகரமாக இடிக்க முடிவு செய்யப்பட்டது.

buildings exploded,abu dhabi,mina zayt,demolishes ,கட்டிடங்கள் வெடித்தன, அபுதாபி, மினா சாய்ட், இடிப்பு

நேற்று காலை 6 மணியில் இருந்து ஷேக் ஜாயித் சுரங்கப்பாதையின் இருவழிச்சாலை, ஷேக் கலீபா பின் ஜாயித் சாலையில் இருந்து ஷேக் கலீபா பாலம், அல் மர்யா தீவில் இருந்து துறைமுகம் செல்லும் ஹம்தான் பின் முய்கம்மது சாலை உள்பட அனைத்தும் மூடப்பட்டது. அந்த சாலைகளின் முகப்புகளில் பொதுமக்கள் யாரும் உள்ளே நுழைந்து விடாத வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு செய்திருந்தனர். கட்டிடம் இடிக்கப்படும் வரை இந்த சாலைகள் மூடப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக அங்கு மனித நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அந்த பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் கட்டிடத்தின் ஒவ்வொரு தளங்களிலும் துளையிடப்பட்டு வெடிமருந்து வைக்கப்பட்டது. குறிப்பாக கட்டிடத்தை உறுதியாக தாங்கி நிற்கும் தூண்களில் வெடிமருந்து வைக்கப்பட்டது. புகையில்லாமல் வெடிக்கும் கார்டைட் என்ற ரசாயனம் வெடிமருந்துக்காக இதில் பயன்படுத்தப்பட்டது. பலத்த வெடிச்சத்தத்துடன் 10 வினாடிகளில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. சிறுது நேரத்தில் அந்த பகுதி கட்டிடமின்றி வெற்றிடமாக காட்சியளித்தது.

Tags :