Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 4 –சி இதில்தான் காங்கிரஸ் கட்சி இயங்குகிறது... மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

4 –சி இதில்தான் காங்கிரஸ் கட்சி இயங்குகிறது... மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

By: Nagaraj Mon, 06 Nov 2023 6:41:58 PM

4 –சி இதில்தான் காங்கிரஸ் கட்சி இயங்குகிறது... மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசம்: இந்த 4 சிக்களில்தான் காங்கிரஸ் கட்சி இயங்குகிறது... Corruption, Commission, Communal riots, Criminal politics என்ற 4 C க்களின் மீது காங்கிரஸ் கட்சி இயங்கிக் கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மாநிலத்தின் வளர்ச்சிக்கு 4c க்களில் இருந்து மாநிலத்தை வெளியே கொண்டு வருவது அவசியம் என்று குறிப்பிட்டார்.

bharat ratna,congress party,impeachment,election campaign,state development ,பாரத ரத்னா, காங்கிரஸ் கட்சி, குற்றச்சாட்டு, தேர்தல் பரப்புரை, மாநில வளர்ச்சி

அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியான அம்பேத்காரை காங்கிரஸ் கட்சி வாழ்நாள் முழுவதும் அவமதித்ததாகக் கூறினார்.

மேலும் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கரை வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு கட்சியாவது அவமதித்திருந்தால் அது காங்கிரஸ் கட்சிதான் என்றும், ஆட்சியில் இருந்தவரை பாரத ரத்னா விருது வழங்க அக்கட்சி அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Tags :