Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை - ரஷ்யா பிரதமர் அறிவிப்பு

ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை - ரஷ்யா பிரதமர் அறிவிப்பு

By: Karunakaran Thu, 23 July 2020 09:42:58 AM

ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை - ரஷ்யா பிரதமர் அறிவிப்பு

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ரஷியா உள்நாட்டு தயாரிப்பான 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் கூறுகையில், ’நாட்டில் மொத்தம் 17 அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக 26 வகையிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

russia,prime minister,corona vaccine,corona virus ,ரஷ்யா, பிரதமர், கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ்

பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின், நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வு கண்காணிப்பதற்கான கூட்டாட்சி சேவையின் தகவலின் அடிப்படையில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளதாகவும், இரண்டு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளதாகவும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

மேலும் அவர், இரண்டு தடுப்பூசிகள் தொடக்க நிலை பரிசோதனையில் உள்ளன. இவை வைராலஜி, பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் மற்றும் தடுப்பூசிகள் மற்றும் சீரம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Tags :
|