Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரில் நாட்டின் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரில் நாட்டின் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்

By: vaithegi Thu, 14 Sept 2023 3:07:02 PM

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரில் நாட்டின் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்

இந்தியா: வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நடக்க உள்ளதாக முன்னதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து 5 அமர்வுகள் இந்த சிறப்பு கூட்டத் தொடரில் நடத்தப்படும் என்றும் முக்கிய முடிவுகள் குறித்த விவாதங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற அலுவலக அறிக்கை வெளியிடப்பட்டது.

bills,special session series ,மசோதாக்கள் ,சிறப்பு கூட்டத் தொடர்


எனவே அதன்படி 18 ஆம் தேதி தொடங்கும் சிறப்பு கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தின் 75 கால ஆண்டு கால பயணம் பற்றிய விவாதங்கள் நடத்தப்படும் .

அதன் பிறகு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் வகையிலான மசோதா உட்பட 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|