Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல் அவிவ் நகரில் அமீரகம், இஸ்ரேல் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல் அவிவ் நகரில் அமீரகம், இஸ்ரேல் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

By: Karunakaran Wed, 21 Oct 2020 1:21:07 PM

டெல் அவிவ் நகரில் அமீரகம், இஸ்ரேல் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல் அவிவ் நகரில் அமீரகம், இஸ்ரேல் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, இரு நாட்டில் வசிக்கும் குடியுரிமை பெற்றவர்கள் விசா இல்லாமல் 2 நாடுகளுக்கும் சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரமான டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து துபாய் மற்றும் அபுதாபி இடையே பயணிகள் விமான போக்குவரத்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காலை அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கு சென்ற எதிகாத் பயணிகள் விமானம் பென் குரியன் விமான நிலையத்தில் முதல் முறையாக தரையிறங்கியது. இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் விமான போக்குவரத்து குறித்து முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை அபுதாபியில் இருந்து அமீரக பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் தக், அமீரக நிதித்துறையின் துணை மந்திரி ஒபைத் அல் தாயர் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் குழுவினர் இஸ்ரேலுக்கு சென்றனர்.

4 agreements,uae,israel,tel aviv ,4 ஒப்பந்தங்கள், யுஏஇ, இஸ்ரேல், டெல் அவிவ்

இந்த விமானத்தில் ஏற்கனவே அபுதாபிக்கு சென்று இருந்த அமெரிக்க கருவூல செயலர் ஸ்டீவன் முன்சின் மற்றும் மத்திய கிழக்கு பிரதிநிதி அரி பெர்கோவிட்ஸ் ஆகியோரும் இஸ்ரேலுக்கு சென்றனர். அதன் பிறகு விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் நடைபெற்ற ஒப்பந்த நிகழ்ச்சியில் அமீரக மந்திரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு பெறுவதற்கு 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு பேசுகையில், இன்று நாம் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளோம். இந்த வரலாறானது தலைமுறைகளை கடந்து நிலைத்து நிற்கும். சமாதானத்திற்கு புகழ் சேர்க்கும். இந்த நாளை என்றும் நினைவில் வைத்துக்கொள்வோம் என்று கூறினார். அதனை தொடர்ந்து அமீரக துணை நிதி மந்திரி ஒபைத் அல் தாயர் பேசுகையில், இந்த ஒப்பந்தங்களில் குறிப்பாக நிதி மற்றும் வர்த்தகத்தை பலப்படுத்தி இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு உதவும் வகையில் பல்வேறு சட்டப்பூர்வமான வரைவுகளை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags :
|
|