Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

By: vaithegi Thu, 19 Oct 2023 11:30:48 AM

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு தற்போது 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

broadcasting minister anurag thakur,journalist,central government employees,pensioners ,ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், செய்தியாளர்,
மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியர்

இதையடுத்து தற்போது உயர்த்தப்பட்டதன் மூலம் அது 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இந்த உயர்வால் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 67.95 லட்சம் ஓய்வூதியர்கள் பலனடைவார்கள்.

2024-25 ராபி சந்தை பருவத்தில் சந்தைப்படுத்தப்படும் 2023-24-ம் ஆண்டின் 6 ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.எனவே இதன்படி கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 1 குவின்டாலுக்கு ரூ.150 அதிகரிக்கும்.

Tags :